அழையா
அழையா விருந்தாளி
அழையா விருந்தாளி
Pages : 103

Credit : 30

Description :


      ருஷ்ய இலக்கியம் உலகுக்கு அளித்த தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையும் சோகம் மிக்கது தான். அவரின் வாழ்க்கையைப் படிக்கும் போது வரம்பில்லா சோகங்களை எல்லாம் இம்மாமேதை தமது எழுத்துக்களில் வடித் தெடுத்துத் தர வேண்டுமென்பதற்காகாவே திட்டமிட்டு, விதியானது இவரைக் கொடூர அனுபவங்களுக்கு ஆளாக்கி வாழ்வெல்லாம் அவரை வதைபட வைத்ததோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. இத்தனை துன்பங்களையும் நேர் கொண்டாலும் தஸ்தயேவ்ஸ்கியின் இலக்கிய பணி சற்றும் தளரவில்லை. மாறாக, கூடுதல் வலிமையோடு பல இலக்கியங்களை படைத்தார். அவரால் படைக்கப்பட்ட சிறந்த படைப்புகளில் ஒன்றே இந்த அழையா விருந்தாளி நாவல்.