பொன்விலங்கு/
பொன்விலங்கு
பொன்விலங்கு
Pages : 692

Credit : 20

Description :


      பொன்விலங்கு சத்தியமூர்த்தி... பெயருக்கேற்ப சத்தியசீலன். வறுமையிலும்செம்மையாக வாழும் இவன் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அநீதிக்கு எதிராக பொங்குவது மட்டுமல்லாது,அதற்குத் தீர்வு தேடித் துடிக்கிறான். நடன மாது மோகினியின் காதலில் திளைக்கும் சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் கல்லூரியில் பேராசிரியராக அங்கு சாதிப்பதும், மோகினியை அடையத் துடிக்கும் மஞ்சள்பட்டி ஜமீன்தார் உள்ளிட்ட பலரால் அவருக்கு நேரும் சோதனைகளை எதிர்கொள்வதுமாக நகரும் கதையில், கல்லூரி அதிபர் பூபதியின் மகள் பாரதியும் சத்தியமூர்த்தியை நேசிக்கிறாள். சத்தியமூர்த்தி-மோகினியின் காதல் என்னவாகிறது? பாரதியின் காதல் முடிவு என்ன? மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் சதியை சத்தியமூர்த்தி எப்படி முறியடிக்கிறான்? என கதை பக்கத்திற்குப் பக்கம் திருப்புமுனைகளோடு விறு விறுப்பாக நகர்கிறது பொன்விலங்கு.